வேல், அலகு குத்தி நேர்த்திக்கடன்
ADDED :2828 days ago
கூடலுார்:லோயர்கேம்ப் சுருளியாறு மின்நிலையம் ரோட்டில் உள்ள மங்கலநாயகி கணணகிதேவி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது.காஞ்சிமரத்துறை முல்லைப் பெரியாற்றில் இருந்து பக்தர்கள் அலகு மற்றும் வேல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். அக்னி சட்டி எடுத்து கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. மஞ்சள் நீராட்டுடன் முளைப்பாரி எடுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.