உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திந்திரிணீஸ்வர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திந்திரிணீஸ்வர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாணம் நடந்தது. திண்டிவனம் திந்திரணீஸ்வர் கோவில், பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, திந்திரணீஸ்வரருக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, திந்திரிணீஸ்வரர்-மரகதாம்பிகைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திருக்கல்யாண உபயதாரர் ஸ்ரீராம் பள்ளி உரிமையாளர் முரளிரகுராமன் மற்றும் ராம்டெக்ஸ் வெங்கடேசன், ராம்லால்ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !