குபேரருக்கு திருக்கல்யாணம்
ADDED :2755 days ago
திண்டுக்கல் செட்டியபட்டி குபேரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. அனுக்ஞை, காசியாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல், மதுவர்க்கம் ஆகிய சடங்குகள் நடந்தது. அதை தொடர்ந்து குபேரர், சித்ரலேகாவுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது. மகாலெட்சுமி குபேரர், 48 நாட்களுக்கு பக்தர்களின் இல்லங்கள், வியாபாரத் தலங்களில் அருள்பாலிக்க உள்ளார். விபரங்களுக்கு 7339661468 ல் தொடர்பு கொள்ளலாம்.