பஞ்சாமிர்த டப்பாவில் சீல்: பழநி கோயிலில் புதுமுறை!
ADDED :5054 days ago
பழநி : பழநி கோயில் பஞ்சாமிர்த டாப்பாக்களில், அலுமினியம் கலந்த காகிதம் மூலம் சீல் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழநி கோயில் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. இதை தவிர்க்க, பஞ்சாமிர்த டப்பா வாய் பகுதியில், அலுமினியம் கலந்த காகிதத்தால் ஆன "சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரத்தை அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பஞ்சாமிர்தத்தில் பிற பொருட்கள் கலந்திருப்பதாக புகார் கூறப்படுகிறது. சீல் வைப்பதன் மூலம் இப்புகாரை தவிர்க்கலாம். சுகாதாரக்கேடு உறுதி செய்யப்பட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.