முத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுத்து வழிபாடு
ADDED :2755 days ago
பொள்ளாச்சி: கிணத்துக்கடவு, மணிகண்டபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 4ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 28ம் தேதி கணபதி ேஹாமம், மழை வேண்டி வேள்வி, மகா சக்தி முத்து மாரியம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம், கம்பம் நடுதல், பூவோடு வைத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் அம்மனுக்கு அபிேஷகம், மாவிளக்கு, பூவோடு எடுக்க ஆற்றுக்கு செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக அம்மன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனர். இன்று காலை, மஞ்சள் நீராடுதல், மாலையில், சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடக்கிறது.