உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா

செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா

செஞ்சி;செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில், தேர் திருவிழா நடந்தது. செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மனுக்கு 500 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு தேர் திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரியம்மனுக்கு தினமும் பொங்கல் வைத்து, சிறப்பு அபிஷேகம் செய்து வந்தனர். இரவில் சாமி வீதி உலா நடந்து வந்தது.  டர்ந்து 9ம் நாள் திருவிழாவாக நேற்று காலை, மாரியம்மனுக்கு 108 பால் குடம் எடுத்தனர். தொடர்ந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 2:00 மணிக்கு, கோட்டையில் உள்ள ராஜகாளியம்மனுக்கு பொங்கல் வைத்து பாரம்பரிய பூஜைகளை செய்தனர். இங்கிருந்து பூங்கரகம் மற்றும் திரிசூலம் எடுத்து வந்தனர். ராஜாகிரி கோட்டை பிரதான வாயிலிலும், மந்தை வெளியிலும் எறுமை கிடாக்களை பலியிட்டனர். தொடர்ந்து 41 அடி உயர தேரில் மாரியம்மன், கமலக்கன்னியம்மன், காளி கோவில் திரிசூலத்தை ஏற்றினர்.

மாலை 3:30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தேர் பவனி துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். தானியம், காய்கறி, நாணயம் உள்ளிட்டவைகளை நேர்த்திக் கடனாக தேரின் மீது வீசினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !