வரும் 8ல் பைரவருக்கு அஷ்டமி பூஜை
ADDED :2754 days ago
ஊத்துக்கோட்டை: தொம்பரம்பேடு, மகா கால பைரவர் கோவிலில், வரும், 8ம் தேதி, தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பு வாய்ந்தது. இவ்விழா, வரும், 8ம் தேதி, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம், காலை, 10:00 மணிக்கு, மூலவர் மகா கால பைரவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின், மகா தீபாராதனை காட்டப்படும். முன்னதாக, கோவில் வளாகத்தில் உள்ள கணபதி, வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் மற்றும் அஷ்ட பைரவர்கள், நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.