கன்னியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED :2754 days ago
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட், லோயர் டிவிஷனில் கன்னியம்மன் கோயில் திருவிழா கடந்த 2நாட்களாக நடந்தது. அதில் முளைப்பாரி, பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மதியம்அன்னதானம் வழங்கப்பட்டது.