உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயன பெருமாள் ஆபரணம் தேடி உற்சவம்

ஸ்தலசயன பெருமாள் ஆபரணம் தேடி உற்சவம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா 23ம் தேதி துவங்கி, தினமும் காலை, இரவு உற்சவங்கள், கருடசேவை, திருத்தேர் முக்கிய உற்சவங்கள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, சுவாமி, குதிரை வாகன வீதியுலா நடந்த் போது, திருமங்கையாழ்வார், சுவாமியின் ஆபரணங்களை களவாடி, மெட்டியையும் கழற்ற முயன்ற போது, சுவாமியின் அருளாசியால் தெளிவடைந்து, திருமொழி பாடி, ஆபரணங்கள் இன்றி, கோவில் வந்த சுவாமியிடம், தேவியர் தகராறு செய்து, வேடுபரி உற்சவம் நடந்தது. நேற்று காலை, பல்லக்கில் வீதியுலா சென்ற சுவாமி, காணாமல் போன ஆபரணங்கள், வீதியில் கிடக்கிறதா என தேடினார். அவர் அணிந்த போர்வையை ஒன்பது முறை களைந்து சோதிக்கப்பட்டது. கோவிலை அடைந்ததும், திருமங்கையாழ்வார், சுவாமியையும், தேவியரையும் சமாதானம் செய்தார். அதைத்தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடந்து, சுவாமி, தேவியருடன் திருக்குளம் சென்று, சக்கரத்தாழ்வார் குளத்தில் மூழ்கி, தீர்த்தவாரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !