நத்தம் பகவதியம்மன் கோயில் விழா
ADDED :2754 days ago
நத்தம், நத்தம் அருகே கு.புதுாரில் மலையாள பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கடந்த ஏப்.17 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. ஏப்.29 ல் தேர்ச்சட்டம் போடுதல், தோரண மரம் நடுதல் நடந்தது. நேற்று முன்தினம் இரவு கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை அம்மன் கண் திறந்து சப்பரத்தில் வாண வேடிக்கை முழங்க கோயிலை சென்றடைந்தார். தொடர்ந்து மாவிளக்கு, அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கப்பட்டது. பகலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலையில் அம்மன் பூஞ்சோலை சென்றார். இரவு புராண நாடகம் நடந்தது. இன்று படுகளம் போடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.