உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவிலில் திருவிளக்கு பூஜை

சாய்பாபா கோவிலில் திருவிளக்கு பூஜை

சாலவாக்கம்:ஷீரடி சாய்பாபா கோவிலில், 2ம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று முன்தினம், திருவிளக்கு பூஜை நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கத்தில், ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது.இக்கோவிலில், இரண்டாம் ஆண்டு நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு, ஆரத்தி நிகழ்ச்சியில் துவங்கி, சாய்பாபா ஹோமம், கலச அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்ட, பல பூஜைகள் நடந்தன.மாலை, 4:00 - 6:00 மணி வரை நடந்த திருவிளக்கு பூஜையில், 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்றனர். இரவு, 7:00 மணிக்கு, பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !