அண்ணாமலையார் கோவிலில் ரூ.1.6 கோடி உண்டியல் காணிக்கை
ADDED :2718 days ago
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, 1.16 கோடி ரூபாய் இருந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், உண்டியல் எண்ணும் பணி, நேற்று (மே 3)ல் காலை, 8:00 மணிக்கு துவங்கி மாலை, 6:00 மணிக்கு நிறைவடைந்தது. கோவில் இணை கமிஷனர் ஞானசேகரன் தலைமையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள், உண்டிலில் இருந்த பணம் மற்றும் நகைகளை எண்ணினர். உண்டியலில், 302 கிராம் தங்கம், 1,570 கிராம் வெள்ளி மற்றும், ஒரு கோடியே, 16 லட்சத்து, 89 ஆயிரத்து, 517 ரூபாய் இருந்தது. சித்ரா பவுர்ணமியையொட்டி, கடந்த மாதத்தை காட்டிலும், இந்த மாதம், உண்டியல் காணிக்கை அதிகரித்துள்ளது என்று, கோவில் அதிகாரிகள் கூறினர்.