பனமரத்துப்பட்டி மல்லூர் மாரியம்மன் திருவிழா வண்டி வேடிக்கை கோலாகலம்
ADDED :2716 days ago
பனமரத்துப்பட்டி: மல்லூர், மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மே 2) பொங்கல் வைத்தல், அக்னி கரகம், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்றிரவு (மே 3)ல், 7:00 மணிக்கு கோட்டை மேடுபகுதியி லிருந்து, வண்டி வேடிக்கை ஊர்வலம் துவங்கியது. ஏழு வாகனங்களில், சிவன், பார்வதி, விநாயகர், முருகன், திருப்பதி ஏழுமலையான், வெள்ளைக்கார துரை ஆகிய வேடமணிந்து, பக்தர்கள் வந்தனர். சேலம் - நாமக்கல் சாலை, பி.மேட்டூர் சாலை, பார்க் தெரு, வீரபாண்டி சாலை வழியாக, கோவிலை அடைந்தனர். அதில், திருப்பதி ஏழுமலையான் வேடம் மக்களை கவர்ந்தது.