ஆண்டிபட்டி சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை மறு பூஜை விழா
ADDED :2715 days ago
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் மறுபூஜை நடந்தது.
விழாவில் மூலவர், உற்ஸவர், கரக அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனைகள் செய்யப்பட்டன. இரவில் வாண வேடிக்கையுடன் கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்கள் விநாயகர், முருகன், சிவன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நாகதேவதை, ஆஞ்சநேயர், கருப்பசாமி, வேம்பரசி ஆகியோருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.