கன்னிவாடி கோனூரில், சந்தனமாரியம்மன் கோயில் விழா
ADDED :2772 days ago
கன்னிவாடி: கோனூரில், சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முன்னதாக, சாட்டு தலுடன் துவங்கிய விழாவில், பண்டாரப்பெட்டி அழைப்பு, அம்மன் கரகம் பாலித்தல், ஊர்வலம் நடந்தது. முளைப்பாரி, பொங்கல் அழைப்பு, கிராம அபிஷேகம் நடந்தது.
ஏராளமானோர் அக்னிச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், கரும்பு தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விசேஷ ஆராதனைகளுடன், அம்மன் மஞ்சள் நீராடல், கங்கை புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.