குளித்தலையில் பக்தர்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் செய்து தர வேண்டும்
ADDED :2716 days ago
குளித்தலை: குளித்தலை, மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகிறது. குளித்தலை சுற்றியுள்ள கிராம மக்கள், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், அதிகாலையில் கடம்பர்கோவில், பரிசல்துறை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி எடுத்துக் கொண்டு மாரியம்மன் கோவில் வருவதுண்டு. தற்போது, காவிரி ஆறறில் தண்ணீர் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, பக்தர்கள் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க, ஜெனரேட்டர் மோட்டார் வசதியுடன் தண்ணீர் வழங்கவேண்டும்.