கிருஷ்ணராயபுரம் மலையாள பகவதியம்மன் விழா திருத்தேரில் அம்மன் திருவீதி உலா
ADDED :2772 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், மலையாள பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி, நேற்று(மே 3)ல் காலை நடந்தது.
கிருஷ்ணராயபுரத்தில், மலையாள பகவதியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 30 முதல் கோவிலில் திருத்தேர் பவனி விழா நடந்து வருகிறது. காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கிடா வெட்டுதல் நடந்தது. நேற்று(மே 3)ல் காலை, அம்மன் திருத்தேரில் திருவீதி உலா வந்தது. அப்பகுதி மக்கள், சுவாமி தரிசனம் செய்தனர். மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.