பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம்
சிவகாசி: சிவகாசிபத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா மே 1 இரவுகொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்பிகை அலங்கரிக்கப்பட்டு பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளித்து வருகிறார். முதல் நாள் விழாவில்வெள்ளி சிங்க வாகனத்தில் அம்பிகை வீதி உலா வந்தார். இரண்டாம் நாளில்காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். மூன்றாம் நாள் விழாவான நேற்று முன்தினம்,காகா குரூப் ஆப் இன்டஸ்டிரீஸ் சார்பில் நடந்தது. காலையில்,அம்பிகை வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி நகர் வலம் வந்து கோயிலில் வீற்றிருந்தார். இரவு கைலாசபர்வத வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். கேரளா திருச்சூர் மாவட்டம் கேச்சரி பகுதியை சேர்ந்த கலைக்குழுவினர் காளி, அம்மன், பரமசிவன் போன்ற தெய்வங்களின்வேடம் அணிந்து நடனமாடி வீதி உலா வந்தனர். ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.