உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு

நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு

தேவிபட்டினம்:தேவிபட்டினம் நவபாஷாணத்தில் தர்ப்பணம், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நவபாஷாணத்தில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து நவபாஷாண பகுதி பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !