தும்பூர் தாங்கல் கோவிலில் சித்திரை வெள்ளி உற்சவம்
விக்கிரவாண்டி: தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில், சித்திரை மூன்றாம் வெள்ளி உற்சவம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில், சித்திரை மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, நாகம்மனுக்கு பால், தயிர், இளநீர், பழவகைகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், மஞ்சள் ஆடை மற்றும் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மகா தீப ஆராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் அபிராம சர்மா தலைமையில், கிரிதர சர்மா, கோபால் சர்மா ஆகியோர் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையதுறை செயல்அலுவலர் மணி, தர்க்கார் செல்வராஜ், கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். விழாவில், பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.