உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காகத்தலை அம்மன் கோவில் வரும் 7ல் கும்பாபிஷேகம்

காகத்தலை அம்மன் கோவில் வரும் 7ல் கும்பாபிஷேகம்

மல்லசமுத்திரம்: கருமனூர் காகத்தலையம்மன் கோவிலில், வரும், 7ல் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கருமனூரில் புதிதாக கட்டப்பட்ட காகத்தலையம்மன், கரியவரதராஜ பெருமாள், கூத்தாண்டேஸ்வரர் சிவாலயம் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முதல் பல்வேறு பூஜைகள் நடந்து வருகின்றன. நாளை காலை, 7.30 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை; இரவு, 9:00 மணிக்கு மேல், 11:15 மணிக்குள் அம்மனுக்கு யந்திர நவரத்தினங்கள் வைத்து, அஷ்டபந்தன மருந்து சாற்றப்படும். வரும், 7 அதிகாலை, 3:00 மணிக்கு, புண்யாக வாசனை, பஞ்சகவ்ய சதாசிவ பூஜை, 96 வகை மூலிகை ஹோமம்; 5:00 - 6:00 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபி ?ஷகம் நடைபெறும். தொடர்ந்து, கரியவரதராஜ பெருமாள் கோவிலில், 9:15 மணி, கூத்தாண்டேஸ்வரர் கோவிலில், 10:00 மணிக்கு கும்பாபி ?ஷகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !