கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED :2770 days ago
பந்தலுார்;பந்தலுார் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. பந்தலுார் சேரம்பாடி சக்தி விநாயகர் கோவில், கும்பாபிஷேக விழா கடந்த, 2ம்தேதி காலை கஜ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம், முதல்கால வேள்வி, தீபாராதனை, பகவதியம்மன் ஆலயத்தில் விசஷே சாந்தி, பூதசுத்தி, ஆசார்ய வர்ணம் பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:00மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நான்காம் கால வேள்விக்கான யாகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அனைத்து கோபுர கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், அம்மன், சிவபெருமான், குருவாயூரப்பன், நவக்கிரகம், பாலமுருகன், புதிய கொடிமரம் மற்றும் சுவாமிகளுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. கும்பாபிஷேகம் தியாகராஜ குருக்கள் தலைமையில் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.