ஜெயராக்கினி ஆலயத்தில் ஆண்டு பெருவிழா துவக்கம்
ADDED :2819 days ago
புதுச்சேரி: -ரெட்டியார்பாளையம் உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி நேற்று மறைமாவட்ட கல்வி செயலர் ஜோசப்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, ஆலய கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏற்றப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, தினமும் காலையில் திருப்பலி, மறையுரையும், மாலையில் திருப்பலி சிறிய தேர்பவனியும் நடக்கிறது. பெருவிழா திருப்பலியை சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா நிறைவேற்ற உள்ளார். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஆரோக்கியநாதன், உதவி பங்குதந்தை சதிஷ்குமார் செய்து வருகின்றனர்.