திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தேரோட்டம்
ADDED :2706 days ago
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், ஏப்., 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆறாம் நாள் விழாவில் காலை, திவ்ய பிரந்த கோஷ்டியினர் முன் செல்ல, ஆனந்த விமானத்தில், ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியாருடன், உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், மாடவீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று( மே.,5) நடைபெற்றது. அதிகாலை, 5:00 மணிக்கு, பார்த்தசாரதி பெருமாள் சர்வ அலங்காரத்துடன், தேரில் எழுந்தருளினார். காலை, 7:00 மணிக்கு, பக்தர்களால் தேர் வடம்பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.