உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்தது நிறைவேற திசையில் வணங்கும் பக்தர்கள்

நினைத்தது நிறைவேற திசையில் வணங்கும் பக்தர்கள்

திருவாடானை: நினைத்த காரியம் நடக்க திசை காவலர்களை வணங்கலாம். ஆன்மிகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. எண்ணிய காரியம் நிறைவேற பக்தர்கள் பல்வேறு நேர்த்திகடனை செலுத்துகின்றனர். பால் காவடி, பறவை காவடி, வேல்காவடி எடுப்பதும், நாக்கு, கன்னம், நெற்றி, உடல்முழுக்க வேலால் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள்கோயில் உள்ளது. இக் கோயில் சன்னதி பின்புறம் பலிபீடம் என்று அழைக்கப்படும் திசைகாவலர் சிலைகள் உள்ளன. இச் சிலைகள் முன்பு அமர்ந்து கைகளை தரையில் வைத்து சிறிது நேரம் தியானம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. இக் கோயிலில் வெள்ளி, செவ்வாய் நாட்களிலும், சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். சிறுவர்கள் படிப்பு வரவேண்டும் என்றும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணம்  நடைபெற வேண்டும் என்றும், வாழ்க்கையில் ஏற்படும் குறைகள் தீர சிறுவர்கள் முதல் மூதியோர்கள் வரை சிறிது நேரம் கண்களை மூடி கையை தரையில் வைத்து தியானம் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !