உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் மேஜையில் அன்னதானம்!

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் மேஜையில் அன்னதானம்!

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், மேஜையில் அன்னதானம் வழங்கப்படுவதால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில், வ.உ.சி., பார்க் ஆஞ்சநேயர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 15 கோவில்களில், அன்னதான திட்டம் நடந்து வருகிறது. நன்கொடையாளர்களிடம் இருந்தும், கோவில் உண்டியல் வசூலில் இருந்தும் கணிசமான தொகை பெறப்பட்டு, அதன் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதிகப்படியான வருமானம் கிடைக்கும் ஈரோடு கோவில்களில், டேபிள், சேரில் பக்தர்கள் உட்கார வைத்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நிதி பற்றாக்குறையால் சில கோவில்களில் தரையில் பக்தர்களை அமர வைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், 2006 முதலே அன்னதான திட்டம் துவக்கப்பட்டு, தினந்தோறும், 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால், பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து அன்னதானம் உண்டனர். மேஜையில் தான் அன்னதானம் வழங்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் மேஜையில், அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பக்தர்கள் கூறுகையில், "மேஜையில் அன்னதானம் உணவை பரிமாறுவது வரவேற்கத்தக்கது. ஈரோட்டிலேயே கோட்டை ஈஸ்வரன் கோவில், வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் டேபிள், சேர் அமைத்து உணவு பரிமாறினால், பக்தர்கள் மகிழ்ச்சியடைவர், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !