பழநி அக்னி நட்சத்திர விழா : மூலிகைக்காற்று வீசும் கிரிவீதி
பழநி: பழநியில் அக்னி நட்சத்திரவிழா நாளை (மே 8ல்) துவங்கி 21 ம் தேதி வரை நடக்கிறது. இந்தநாட்களில் கடம்பமரப்பூக்களின் மூலிகைக்காற்றை அனுபவிக்க பக்தர்கள் கிரிவலம் வருவர்.பழநியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பின் ஏழு, வைகாசி முன் ஏழு நாட்களில் அக்னிநட்சத்திர விழா (சித்திரைக்கழுவு) நடக்கும். இந்நாட்களில் சேலம், திண்டுக்கல், கரூர், நாமக்கல், கோவை மற்றும் பழநியை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்துகொள்வர்.
மூலிகை காற்று: விழா நாட்களில் பழநி மலைக்கோயில் கிரிவீதியில் பூத்துக்குலுங்கும் கடம்ப மரப்பூக்களின் வாசனையை நுகர்ந்தால் வயிற்றுவலி, வெப்ப நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இதனால் பெண்கள் கடம்பப்பூக்களை தலையில்சூடி அதிகாலை, மாலையில் மலைக்கோயிலை கிரிவலம் வருவர். விழாவின் கடைசி நாளில் மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடக்கும்.