முப்பிடாரிஅம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :2768 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் சுரைக்காய்பட்டி முப்பிடாரிஅம்மன் கோயில் பொங்கல்விழாவில் முதல்நாள் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடந்தது. இரண்டாம் நாள் விழாவில் விசஷே அலங்காரத்தில் முப்பிடாரி அம்மன் காட்சியளித்தார். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் என்.ஆர்.கே. மண்டபம், அயோத்திராம் நகர், சம்பந்தபுரம், சுரைக்காய்பட்டி பகுதிகள் வழியாக வீதி உலா நடந்தது.