உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேய கோவிலில், 10ல் அனுமன் ஜெயந்தி

வீர ஆஞ்சநேய கோவிலில், 10ல் அனுமன் ஜெயந்தி

ஊத்துக்கோட்டை: வெலமகண்டிகை, வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில், வரும், 10ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக துவங்க உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, பென்னலுார்பேட்டை அருகே உள்ளது வெலமகண்டிகை கிராமம். இங்கு, 15ம் நுாற்றாண்டில் வியாச மகிரிஷியால் பிரதிஷ்டை செய்த வீரஆஞ்சநேயர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு, வரும், 10ம் தேதி, 43ம் ஆண்டு, 10 நாட்கள் அனுமன் ஜெயந்தி விழா துவங்க உள்ளது. அன்றைய தினம், காலை, 8:00 மணிக்கு கலச ஸ்தாபனம், கொடியேற்றம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். காலை, 11:00 மணிக்கு தசவதார மூர்த்திகள் பிரதிஷ்டை நடைபெறும். அன்று முதல், ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை சுவாமிக்கு அபிஷேகம், 10:00 மணி முதல், 11:00 மணி வரை, சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும். பிற்பகல், 2:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, ஹரிகதை நடைபெறும். விழாவின் முக்கிய நாளான, வரும், 16ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறும். இதில், வெலமகண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிப்பர். இதை தொடர்ந்து உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !