உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சநாயக்கனுார் மாரியம்மன் கோவில் திருவிழா

மஞ்சநாயக்கனுார் மாரியம்மன் கோவில் திருவிழா

கோட்டூர்: கோட்டூர் அடுத்த மஞ்சநாயக்கனுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், நாளை தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மஞ்சநாயக்கனுார் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மாரியம்மனுக்கு கும்பம் தாளித்தல் நிகழ்ச்சி மற்றும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி தொண்டாமுத்துார் அரண்மனையார் மோகன்குமார் தலைமையில் நடந்தது. நாளை தீர்த்தம் கொண்டுவருதல்; 9ம் தேதி காலை, 8:00 மணிக்கு மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்தல், காலை, 11:00 மணிக்கு விக்னஷே்வரர் பூஜை, தனகர்ஷண பூஜை, மழை வேண்டி வர்ண பூஜை, கோமாதா பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, 11ம் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் அபிஷேக பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !