காசி விஸ்வநாதர் கோவில் ஏழாம் ஆண்டு விழா
ADDED :2711 days ago
ஊட்டி;ஊட்டி காந்தளில் உள்ள காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக ஏழாம் ஆண்டு பூர்த்தி விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை 9:00 மணி முதல், 12:00 மணி வரை விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், மஹாயாகம், பூர்ணாகுதி, அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சுவாமி வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.