உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாத்திமா ஆலயத்தில் 43வது ஆண்டு விழா

பாத்திமா ஆலயத்தில் 43வது ஆண்டு விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் துாய பாத்திமா அன்னை ஆலயத்தில் 43வது ஆண்டு விழா கொடியேற்றம் நடந்தது. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள துாய பாத்திமா அன்னை ஆலய 43வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 13ம் தேதி முடிகிறது.  இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் வரவேற் றார். புதுச்சேரி இயக்குனர் அருமைசெல்வம், கடலுார் ரொசாரியோ, மிக்கேல்புரம் பங்குத்தந்தை மகிமை ஆகியோர் நம்பிக்கையின் மரியா தலைப்பில் சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர், ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற் றப்பட்டது. தினசரி சிறப்பு திருப்பலி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !