திருச்செந்தூருக்கு பாத யாத்திரை!
ADDED :5054 days ago
தென்காசி:ஆயிரப்பேரியில் இருந்து முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாத யாத்திரை புறப்பட்டனர்.தென்காசி அருகே ஆயிரப்பேரியை சேர்ந்த முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று முருகனை வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு விரதம் இருந்த முருக பக்தர்கள் நேற்று இருமுடி கட்டும் பூஜை நடத்தினர். பூஜைக்கு பிறகு பாத யாத்திரை துவங்கினர். அலங்கரிக்கப்பட்ட முருகன் படத்தை தாங்கிய வேன் முன்னே சென்ற முருகனின் பாடல்களை பாடியபடியே பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். பொங்கல் அன்று இவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபடுகின்றனர்.