கரிய வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2824 days ago
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், கருமனூரில், கூத்தாண்டீஸ்வரி அம்பிகை, ஸ்ரீதேவி, பூமிதேவி உடனுறை, கரிய வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கரிய விநாயகர், கரிய காளியம்மன், காகத்தலை அம்மன் சுவாமிக்கு தனி சன்னதிகள் உள்ளன. திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், நேற்று கும்பாபி?ஷகம் நடந்தது. விழா, கடந்த, 4ல் கணபதி ?ஹாமத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சுவாமிகளுக்கு கங்கனம் கட்டுதல், 96 வகை மூலிகை ?ஹாமம், கும்பங்கள் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டது. 5:00 மணிக்கு, ராஜ கோபுரம், மூல கோபுரம் குறிஞ்சி, விநாயகர், கரிய காளியம்மன், காகத்தலை அம்மனுக்கு கும்பாபி?ஷகம் செய்யப்பட்டது.