எந்த பூவை என்று சூட்டுவது?
ADDED :2751 days ago
தெய்வங்களுக்கு பூஜை செய்வதற்குரிய மலர்கள், வீட்டுத் தோட்டத்தில் பறித்ததாக இருப்பது ரொம்பவும் விசேஷம். இதற்காக பெரிய இடமெல்லாம் தேவையில்லை. வீட்டில் ஒரு தொட்டியை வைத்து, ஏதேனும் ஒரு மலர்ச்செடி வளர்த்தாலே போதும். இந்தப் பூக்களை பறித்த அன்றே சூட்டினால் முழுபலனும் கிடைக்கும். மறுநாள் சூட்டினால் சுமாரான பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். குளத்தில் பூக்கும் தாமரை, அல்லிப் பூக்கள் மற்றும் வில்வம், துளசி, விபூதிப் பச்சிலை, மருக்கொழுந்து, வெள்ளி, தங்கப் பூக்களை பறித்த அன்றே சூட்ட வேண்டிய கட்டாயமில்லை.