தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :2820 days ago
தாடிக்கொம்பு: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று, தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு ஐந்து கால பூஜைகள் நடந்தன. மஞ்சள் காப்பு மற்றும் செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பைரவர் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.