உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோவில் திருவிழா: பொங்கல் வைத்து வழிபாடு

பகவதியம்மன் கோவில் திருவிழா: பொங்கல் வைத்து வழிபாடு

கிருஷ்ணராயபுரம்: மேட்டு திருக்காம்புலியூர், பகவதியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டு திருக்காம்புலியூரில், பகவதியம்மன் கோவில் உள்ளது. இதில், நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் எடுத்து வந்து, பொங்கல் விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மா விளக்கு எடுத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !