பெரியகுளம் காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :2725 days ago
பெரியகுளம், பெரியகுளம் கம்பம்ரோட்டில் உள்ள காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சரவணன், கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர். பக்தர்கள் பாலசுப்பிரமணியர் கோயிலில் இருந்து சக்திகரகம் எடுத்து வந்தனர். மாவிளக்கு, பொங்கல் வைத்தனர். அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை தெற்குபுதுத்தெரு மறவர் முன்னேற்ற சங்கம் , பொன்மயில் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.