சித்தார் சக்தி மாரியம்மன் கோவில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
                              ADDED :2730 days ago 
                            
                          
                          பவானி: பவானி, சித்தாரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. பவானியில் இருந்து, மேட்டூர் செல்லும் மெயின் ரோட்டில், சித்தாரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 11:00 மணியளவில் காவிரி ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குட ஊர்வலம் சென்று, கோவிலை அடைந்தனர். பின்னர் பூவோடு எடுத்து குண்டம் இறங்குதல், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 7:00 மணிக்கு பொங்கல் அழைப்பு, முப்போடு அழைப்புடன் மாவிளக்கு ஊர்வலம், மாலை, 4.00 மணிக்கு அலகு குத்தி, அக்னிசட்டி ஊர்வலம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.