கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா
ADDED :2730 days ago
நெட்டப்பாக்கம்:மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், கூத்தாண்டவர் ரத உற்சவம் நேற்று காலை 7. 30 மணிக்கு நடந்தது. உற்சவத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம், விஜயவேணி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜவேலு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதி வழியாக சென்ற தேரோட்டம் கோவில் தேர் அடியை வந்தடைந்தது. வரும் 11ம் தேதி திரவுபதி அம்மனுக்கு தீமிதி திருவிழா மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. 12ம் தேதி அம்மனுக்கு மஞ்சளர் நீராட்டு விழா நடக்கிறது. விழாவில் காங்., பிரமுகர் அம்மைநாதன், குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி பாகூர் தாசில்தார் கார்த்திகேயன் செய்திருந்தார்.