ஆளவந்தீஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசு குருபூஜை விழா
ADDED :3034 days ago
கிருஷ்ணராயபுரம்: பழைய ஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில், திருநாவுக்கரசு குருபூஜை விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில், நாயன்மார்களில் ஒருவரான திருநாவுகரசருக்கு, குருபூஜை விழா நடந்தது. அதை முன்னிட்டு, சுவாமிக்கு, ஒன்பது வகை அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. மேலும், மகேஷ்வர பூஜை, தேசிகர் கணேசனின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.