அலகாபாத் கும்பமேளா தேதி அறிவிப்பு
ADDED :2746 days ago
அலகாபாத், : புராணங்களில், அசுரர்களிடம் இருந்து காக்க, கடவுள் திருமால், அமிர்த கலசத்தை எடுத்துச் சென்றபோது, அதில் இருந்து நான்கு துளிகள் பூமியில், அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நான்கு இடங்களிலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது. அலகாபாத்தில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதி ஆகிய மூன்றும் கூடும் திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர்.’அடுத்த ஆண்டு, ஜன.,14 மகர சங்கராந்தி முதல், மார்ச், 4 மஹா சிவராத்திரி வரை, 50 நாட்களுக்கு கும்பமேளா நடத்தப்படும்’ என, அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கும்பமேளாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய, மத்திய - மாநில அரசுகள் 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளன.