திருத்தணி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :2744 days ago
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, வியாழக்கிழமையையொட்டி, மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு, காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. மாலையில் சந்திய ஆரத்தி மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வழிபட்டனர். இதே போல், நகரி பகுதியில் அமைந்துள்ள, சாய்பாபா கோவிலிலும் அபிஷேகம், பூஜைகள் நடந்தன.