அவலூர்பேட்டை கோவிலில் சிவபெருமான் திருக்கல்யாணம்!
ADDED :5054 days ago
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிவபெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.சுந்தரருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சியளித்த தினத்தை முன்னிட்டு அவலூர்பேட்டை ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிவபெருமானுக்கும், சுயம்வரா பார்வதி தேவிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. முன்னதாக சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.இதில் ஊராட்சி தலைவர் கலாராஜவேலாயுதம், வழிபாட்டு மன்ற பொறுப்பாளர் தனலட்சுமி கலந்துக் கொண்டனர்.