தமிழகத்தில் 82 திவ்யதேசங்கள் அமைந்தது ஏன்?
ADDED :2817 days ago
பெருமாள் குடிகொண்டிருக்கும் 108 தலங்களை திவ்ய தேசங்கள்’ என்கிறார்கள். இவற்றில் 106 தலங்கள் பூலோகத்தில் உள்ளன. இரண்டு தலங்கள் வைகுண்டத்தில் இருக்கின்றன. அவை வைகுண்டம் மற்றும் திருப்பாற்கடல் ஆகும். ஆழ்வார்களால் பாடப்பட்ட தலங்கள் அனைத்தும் திவ்யதேசங்கள் வரிசையில் வரும். தமிழகத்தில் 82 திவ்யதேசங்கள் உள்ளன. மனிதன் வாழ்வதற்கு தேவையான சக்தியை பூமிக்கு கீழே இருக்கும் தரீத்ரிசாரம்’ என்ற நரம்பு கொடுக்கிறது. இந்த நரம்பு ஓடும் பகுதி தமிழகத்தில் அதிகபட்சமாக இருக்கிறது. எனவே இங்கு 82 திவ்ய தேசங்கள் அமைந்தன.