உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் ரங்கநாதருக்கு மகா புஷ்பயாகம்

சிங்கவரம் ரங்கநாதருக்கு மகா புஷ்பயாகம்

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மகா புஷ்பயாகம் நடந்தது. செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் கோடை காலத்தை முன்னிட்டு ரங்கநாதரை
குளிர்விக்கவும், மழை வேண்டியும் மகா புஷ்பயாகம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம்
செய்தனர். தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரமும், புஷ்ப யாகமும், 12 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில், உபயதாரர்கள் ஸ்ரீராம் ரங்கராஜ், பாலாஜி சுரேஷ் மற்றும் விழா குழுவின கலந்து கொண்டனர். மதுசூதனன் பட்டாச்சார்யார் தலைமையிலான குழுவினர்யாக பூஜைகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !