உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி சங்கர மடம் மண்டபத்தில் சீதா கல்யாண உற்சவம் கோலாகலம்

சிருங்கேரி சங்கர மடம் மண்டபத்தில் சீதா கல்யாண உற்சவம் கோலாகலம்

சேலம்: சேலம் சந்திரசேகர கமலம் பவுண்டேஷன் சார்பில், இரண்டாவது அக்ரஹாரம், சிருங்கேரி சங்கர மடம் மண்டபத்தில், சீதா கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, விக்னேஷ்வர பூஜையுடன், விழா தொடங்கியது. முதல்நாளில், தோடய மங்களம், அஷ்டபதி பஜனை, அஷ்டபதி புத்தகம் வெளியீட்டு விழா, பிரசாதம், திவ்யநாமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 9:00 மணிக்கு, சீதா கல்யாண உற்சவம் தொடங்கியது. உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினர், திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர். மதியம் திருமண விருந்து, மாலை பவளிம்பு உற்சவம், ஆஞ்சநேய உத்சவம், மங்கள ஆரத்தி ஆகியவை நடந்தது. ஏராளமானோர் கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை டிரஸ்டி ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !