உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிமார் திருவிழாவுக்கு கொடியேற்றம்

கன்னிமார் திருவிழாவுக்கு கொடியேற்றம்

வால்பாறை: வால்பாறை டோபி காலனி கன்னிமார், கருப்பராயர் சுவாமி கோவிலின், 40ம் ஆண்டு திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், வரும், 18ம் தேதி நடுமலை ஆற்றிலிருந்து கும்பம் முத்திரித்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். வரும், 19ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மாலையில் மாவிளக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜையும் நடக்கிறது.வரும், 20ம் தேதி நடுமலை ஆற்றிலிருந்து பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !