ஜோதிலிங்க தரிசனத்தில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :2708 days ago
வால்பாறை: பிரஜாபிதா பிரம்ம குமாரிகள், ஈஸ்வர்ய விஷ்வவித்யாலம் சார்பில் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 12 ஜோதிலிங்க தரிசனம் கடந்த, 11ம் தேதி முதல் நடக்கிறது. விழாவில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழாவுக்கு, வால்பாறை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். போராசிரியர் பிரவீனா வரவேற்றார். வால்பாறை கூட்டுறவு நகர வங்கி முன்னாள் தலைவர் அமீது, மாவட்ட ஆதி திராவிட நலக்குழு உறுப்பினர் பொன்கணேஷ் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளரும் கே.ஜி., மருத்துவமனை நிறுவனருமான பக்தவத்சலம் கலந்து கொண்டு பேசினார்.