பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை
ADDED :3069 days ago
கண்டாச்சிபுரம்: கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில்,உச்சிகால பூஜைகள் நடைபெற்றன. கெடார் அடுத்த சிறுவாலை கிராமத் தில் அமைந்துள்ள, பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோம வாரத்தையொட்டி உச்சிகால பூஜைகள் நடைபெற்றன. காலை 11:30 முதல் மூலவர் பாலேஸ்வரருக்கு, லலிதா சகஸ்ரநாமம்அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற உச்சிகால பூஜையில்ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமிகளை வழிபட்டனர். பின்னர் பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், அர்ச்சகர் கோபி அய்யர் ஆகியோர் செய்தனர்.